அதிகாரிகளின் அசமந்த போக்கே சூழல் பாதிப்பிற்கு காரணம் -ஜனாதிபதி !

Monday, February 13th, 2017

நாட்டின் சுற்றாடலை பாதுகாத்து அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ளும் கனவை மெய்ப்பட செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

குருணாகலில் குடிவரவரவு,குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதன் போது ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்…

உலகின் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் பசுமையான கனவுள்ளது. இன்று அபிவிருத்தி அடைந்த நாடுகளின் சந்தைகளில் ஒட்சிசன் நிரப்பப்பட்ட பைகளை கழுத்தில் தொங்க வைத்தவாறு நகரங்களில் மக்கள் வாழ்கின்றனர்.

எமது நாட்டையும் அந்த நிலைக்கு தள்ளிவிடுவதா? என்று சிந்திக்க வேண்டும். தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் கனவுகள் இருக்கின்றன. மொரகஹகந்த நீர்த்தேக்கம் தொடர்பில் எனக்கும் கனவு ஒன்று இருந்தது. அந்த கனவு நனவாக மாறிவிட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.

maith1.jpg2_.jpg4_

Related posts: