கோதுமை மா,  பெரிய வெங்காயம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரி அறவிட முயற்சி!

Friday, July 27th, 2018

எதிர்காலத்தில் கோதுமை மாவிற்கு விசேட வரியொன்றை விதிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து தருவிக்கும் பழவகைகள், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம் போன்றவற்றிற்கும் எதிர்காலத்தில் வரி அறவிட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுளார்.

நாட்டுக்கு தேவையான கோதுமையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுகிறது. இந்த நிலையில், விசேட வரி விதிக்கப்படுவதினூடாக இந்த செலவை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு விசேட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சகல பிரதேசங்களிலும் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts:

இலங்கையில் கலப்பு தேர்தல் முறைக்கு நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை - அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவ...
கியூ.ஆர். முறைமை விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தை சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும் சிறந்த தள...
பலாலி சர்வதேச விமான நிலைய பயணிகள் வசதிகளை 200 மில்லியன் ரூபாய் செலவில் விரிவுபடுத்த நடவடிக்கை - அமைச...