அதிகரித்த வேகத்தால் A-9 வீதியில் கோர விபத்து: நெடுந்தீவு இளைஞன் பரிதாப பலி!

ஏ- 9 பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் நெடுந்தீவை சேர்ந்த தர்மதுரை பகீரதன் (24 ) என்பவரே உயிரிழந்தள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் யாழ்.நகரில் இருந்து ஏ9 பிரதான வீதியில் வேகமாக பயணித்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து ஏ 9 பிரதான வீதியின் மாம்பழம் சந்திக்கு அண்மையில் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.
இதனால் தலைப்பகுதியில் பலத்தகாயமடைந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்திருந்தாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் - சுதத் சமரவீர !
ஆளும் தரப்பு பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் தலைமையில் நாளை கூட்டம் !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இடையே விசேட சந்திப்ப...
|
|