அதிகரிக்கிறது வைரஸ் காய்ச்சல் : மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

Tuesday, April 18th, 2017

அண்மைய மாதங்களில் நாடெங்கும் பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளிலும் தனியார் மருந்தகங்களிலும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களை இலகுவாகத் தாக்கும் இந்த நோய்க்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது நிமோனியா காய்ச்சலுக்கு வழிவகுப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைரஸ் காய்ச்சலுக்கான அத்தியாவசிய மருந்தான ‘டெமிப்லு’ எனும் மருந்து (கெப்ஸ்யூல்) அரச வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக இருப்பதுடன், குறிப்பிட்ட சில தனியார் மருந்தகங்களில் அந்தக் மாத்திரை 600 ரூபா வரை விலைபோகின்றது.

இதன் காரணமாக சாதாரண மக்கள் இந்த மருந்தை பார்மஸிகளில் வாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனவும், சுகாதார அமைச்சு இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தீர்வொன்றை வழங்கவேண்டும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:


கூட்டமைப்புடன் எதுவித உடன்படிக்கைகளும் கிடையாது: மக்கள் நலன்களுக்காகவே வெளியிலிருந்து அதரவுகொடுத்துள...
பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது - சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவிப்பு!