கூட்டமைப்புடன் எதுவித உடன்படிக்கைகளும் கிடையாது: மக்கள் நலன்களுக்காகவே வெளியிலிருந்து அதரவுகொடுத்துள்ளோம் – ஈ.பி.டி.பி!

Friday, March 30th, 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் அதரவு வழங்குவது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எந்தவொரு உடன்படிக்கைகளுக்கம் உட்பட்டோ அன்றி நிபந்தனைகளின் பிரகாரமோ கிடையாது. நாம் எமது கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களில் யார் ஆட்சி அமைக்கக்கூடிய அசனங்களுடன் அட்சிக்காக உரிமை கோருகின்றார்களோ அவர்கள் மக்கள் நலன்களில் அக்கறையுடன் செயற்பட்டால் அதற்கு வெளியில் இருந்த ஆதரவு தருவதாகவே கூறியிருந்தோம். அதன் பிரகாரமே தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நாம் வெளியில் இருந்த அதரவை வழங்கியுள்ளொம் என கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகர சபை உறுப்பினரமான கா வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணியும் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினரமான றெமீடியஸ் ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

நடைபெற்று மடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவருக்கும் ஆட்சியமைக்கக் கூடிய பலம் கிடையாது போனதால் அவ் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சியமைக்க முயற்சிகள் மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளோம். இதற்காக நாம் உடன்படிக்கைகள் எதுவும் செய்துகொண்டது கிடையாது.  அத்துடன் நாம் ஒருபோதும் பங்களிகளாகவும் செயற்படப் போவதில்லை.

மக்களின் நலன்களை முன்னிறுத்தி உழைக்க யார் வந்தாலும் அவர்களுக்கு நாம் ஆதரவு கரம் கொடுப்போம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.

எமது கட்சியின் நிலைப்பாட்டக்கு இணங்க அவர்கள் தமது செயற்பாடகளை மக்கள் நலன்களை மன்நிறுத்தியமாக அமைத்துக்கொண்டால் அவற்றுக்கு அதரவாக செயற்படுவொம். ஆனால் அவர்களது செயற்பாடகள் மக்கள் நலன்களுக்கு ஆரோக்கியமற்றவகையில் செல்லுமானால் அதற்கு நாம் ஒருபொதும் துணைபோகமாட்டோம். அவ்வாறான சம்பவங்களில் அதைத் தட்டிக்கேட்பது மட்டுமல்லாது அதை எதிர்த்தும் நாம் மக்கள் நலனில் அக்கறையுள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் செயற்படுவோம்.

Related posts: