அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் – அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை!
Friday, September 15th, 2023
அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் பின்னர் இந்த நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், 2023 முதல் 2028 வரை தேசிய பால் கொள்கை என்ற ஐந்தாண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2021ஆம் ஆண்டில் 82087 மெட்ரிக் தொன் பால் மற்றும் பால் தொடர்பான பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


