அடுத்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவும் அபாயம் – சுகாதார பணியகம் எச்சரிக்கை!

Sunday, January 30th, 2022

நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ்  பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன் வைரஸ் பரவுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலைமை தொடருமானால் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்பரவல் வேகமாக தாக்கத்தை செலுத்தி வருகின்ற நிலையில், சுகாதார வழிமுறைகளில் எவ்வாறான மாற்றங்களை முன்னெடுக்க நேரிடும் என்பது குறித்தும், அடுத்த கட்ட அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்தும் தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் அதிகளவான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

தற்போது அடையாளம் காணப்படும் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களில் 50 வீதத்திற்கு அதிகமானவர்கள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே தடுப்பூசி மூலமாக மட்டுமே எம்மால் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும். இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட சகலரும் மூன்றாம் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: