அடுத்த மாதம் நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கை!

Sunday, August 21st, 2016

நல்லிணக்கம் தொடர்பான ஆலோசனை செயலணி தமது இறுதி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் இறுதிப்பகுதியில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள் பாதுகாவலர்-சட்டத்தரணி -மனோரி முத்தட்டுவேகமவின் தலைமையில் இந்தக்குழு செயற்பட்டு வருகிறது. இந்தக்குழுவின் செயலாளராக இருக்கும் பாக்கியசோதி சரவணமுத்துவின் தகவல்படி, குறித்த செயலணிக்கான மக்கள் கருத்துக்கள் மற்றும் முறைப்பாடுகள் இந்த மாத இறுதிக்குள் சேகரிக்கப்பட்டு விடும்.

இந்தநிலையில் இறுதி அறிக்கை செப்டம்பர் நடுப்பகுதி அல்லது இறுதிப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும். கடந்த ஜனவரியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட இந்தக்குழுவில் 11 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.இந்தக்குழு, அரசாங்கத்தின் உத்தேச நல்லிணக்க பொறிமுறை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்கள் கருத்துக்களை பெற்றுவருகிறது.

Related posts: