அடுத்த மாதம்முதல் பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பம் – கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நடவடிக்கை!
 Saturday, October 30th, 2021
        
                    Saturday, October 30th, 2021
            
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று(29) சந்தித்ததன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பாடசாலைகளில் சுத்திகரித்தல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் கொவிட் பரவல் ஒப்பிட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இரு பிரதான கட்சிகள்
பல வருடங்களாக பயன்படுத்தப்படாத  23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்...
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு - குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியல...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        