அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு டெங்கு நோயின் தாக்கமும் இலங்கையில் உச்சம் பெறும் – எச்சரிக்கை விடுக்கின்றது தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு !

Monday, May 18th, 2020

கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், டெங்கு நோயும் அதிகளவில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு  எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

அத்துடன் மே மாதம் இறுதியில் இருந்து அடுத்த மூன்று மாத காலத்திற்குள் டெங்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தெமாடர்பில் கூடிய கவனம் செலுத்தும் அதேவேளையில் டெங்கு நோய் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அநுராதபுர மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட டெங்கு தொற்று நோயியல் நிபுணர் வைத்திய தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் 63 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த காலங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வியாபார நிலையங்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்கான நடிவடிக்கைகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் டெங்கு அச்சுறுத்தல் மிக்கவை என ஏற்கனவே சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: