அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்மைநிலை கண்டறியப்படும் – பிரதமர்!
Friday, November 11th, 2016
அங்கவீனமுற்ற படை வீரர்கள் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் விரிவான முறையில் ஆராய்வதாகவும் பிரதமர் கூறினார்.பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்த சம்பவம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பிரதமர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில் அங்கவீனமுற்ற படை வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் தறுவாயில் இவ்வாறான நிலமை ஏற்பட்டமை குறித்து உண்மைநிலை கண்டறியப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அங்கவீனமுற்ற படைவீரர்கள் தொடர்பான சமீத்திய சம்பவம் தொடர்பான விசேட அறிக்கையை அமைச்சர் சாகல ரட்னாயக்க நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts:
|
|
|


