MGS சுவையூட்டிக்கு தடை!

Wednesday, March 9th, 2016
வரும் இரு வாரங்களுக்குள் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் MGS எனும் சுவையூட்டியை சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த சுவையூட்டி களைநாசினியாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி உணவு ஆலோசனை சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சோடியம் குளுமேட் எனப்படும் MGS சுவையூட்டியை சந்தையில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: