72 லட்சம் ரூபா தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தால் வருமானம்!
Wednesday, September 7th, 2016
தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான போட்டிகளால் 72 லட்சங்கள் வருமானமாகபெறப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் மேலதிகமாக 40,000 ஆசனங்களைக் கொண்டதாக இந்த மைதானம்புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் தம்புள்ள மைதானத்தின் பொறுப்பாளரும், இலங்கைகிரிக்கெட் தேசிய திட்ட நிர்வாகியுமான சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலும் கிரிக்கெட் மைதானம் ஒன்றுஅமைக்கப்படவுள்ளதோடு,இன்னும் 3 வருடங்களில் இலங்கையின் கிரிக்கெட்டின் அபிவிருத்தியில் பல மாற்றங்கள் செய்யப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டே குறித்த தம்புள்ள மைதானத்தில் முதலாவது போட்டி நடைபெற்றதாகவும்,கடந்த பத்து வருடங்களாக மைதானமானது சரியான புனரமைப்பு இல்லாது காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தான் இந்தப் போட்டிகளுக்காக மைதானம் முற்றுமுழுதாக புனரமைப்பு செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாகவே ரசிகர்களின் வரவும் அதிகரித்து காணப்பட்டதோடு, இங்கு நடைபெற்ற 3 போட்டிகளிலும் 72 லட்சத்துக்கு அதிகமானவருமானத்தை பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


