6 மாதத்திற்குள் 23 அரசியல் கைதிகள் விடுதலை!
Thursday, September 22nd, 2016
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 96 பேரில் 23 பேரை புனர்வாழ்வளிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த 23 பேரையும் விடுதலை செய்வதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனிடம் உறுதியளித்துள்ளார்.இதன்படி விடுதலை செய்யப்பட உள்ள 23பேரின் பெயர் விபரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


Related posts:
அனைத்து எய்ட்ஸ் நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை!
சிகரட் விலை மேலும் அதிகரிப்பு!
பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் வெளியானது!
|
|
|


