50 இலட்சம் ரூபாய் திருடிய திருடன் கைது!

Wednesday, December 28th, 2016

தன்னியக்க பணம் பெறும்   இயந்திரங்களில், 192 அட்டைகளை (ஏ.டி.எம் காட்) பயன்படுத்தி, சுமார்   50 இலட்சம்   ரூபாய்க்கு   மேற்பட்ட தொகையைத் திருடியதாகக்   கூறப்படும்  29, 33 வயதுகளையுடைய   இருவரை   குற்றப்புலனாய்வுப்  பிரிவினர்   கைதுசெய்துள்ளனர்.

அவ்விருவரையும் கைது செய்யும் போது, அவர்களிடமிருந்து 4 கிராம் 1 மில்லிகிராம் ஹெரோய்ன்,  இரண்டு துப்பாக்கிகள்,  தோட்டாக்கள்,  192 அட்டைகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

ஒருவர் பிலியந்தல பகுதியிலும், மற்றையவர் காலி பகுதியில் வைத்துமே கைதுசெய்யப்பட்டனர்   என்று   குற்றப்புலனாய்வுப் பிரிவு   அதிகாரிகள்   தெரிவித்துள்ளனர். பணம் திருடப்படுவது குறித்து,  தனியார் வங்கிகள் ,குற்றப்புலனாய்வுத்  திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும்,  மாத்தறை,  மிரிஸ்ஸ,  அம்லந்தொட்ட,  பிலியந்தல,  கதிர்காமம் ஆகிய  பிரதேசங்களுக்குச் செல்லும் வழியிலேயே  இவ்வாறு ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி   பணத்தை   எடுத்துள்ளனர்.

arrest_1_0_mini-720x480

Related posts:

யாழ்ப்பாணம் பல்கலை, கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ...
சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல் – சிமெந்து தட்டுப்பாடு தொடர்பிலும் அவதானம்!
ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் வருகிறது மாற்றம் - சுற்றுலாத் துறைக்கும் வருகின்றத...