வழித்தட அனுமதியின்றி பஸ் சேவை: சாரதிக்கு இருபது ஆயிரம் ரூபா அபராதம்!
Thursday, December 1st, 2016
வழித்தட அனுமதியின்றி கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தின் சாரதிக்கு 20ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பயணிகள் பேருந்தினை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் நுணாவில் பகுதியில் வைத்து சோதனை மேற்கொண்ட வேளை வழித்தட அனுமதியின்றி பயணிகளை ஏற்றி சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பேருந்தினை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதுடன் பயணிகளை வேறு ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பினர். மேற்படி பேருந்தின் சாரதிக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரம் மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts:
நீரிழிவு நோயின் தாக்கத்தால் சுன்னாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர்!
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் - உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை –...
"டிட்வா" புயலின் வெளி வளையம் வடக்கை தொட்டுள்ளது - மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரி...
|
|
|


