உள்ளுராட்சி தவிசாளர்கள் மரநடுகையை ஊக்குவிக்க கோரிக்கை!

Tuesday, June 5th, 2018

குடாநாட்டில் மரங்கள் அழிக்கும் வீதத்திற்கு ஏற்ப மீள் நடுகை என்பது மிக குறைவாகவே உள்ளது. எனவே அழிவு நடைபெற்றதை நாம் பேசிக்கொண்டிராது மீள் நடுகையை புதிதாக பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள் மரம் நடுகையை துரித வேகத்தில் அதிகரிக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற முன்னாள் சிரே~;ட விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம் தெரிவித்தார்.

பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மீள்நடுகை என்பது பூச்சியம் என்ற தலைப்பில் திருமதி நாச்சியார் செல்வநாயகம் கருத்து தெரிவிக்கையில் ஜீன் மாதம் முழுவதும் மரநடுகை மாதத்திற்கு உரித்தானது. எமது வட மாகாணத்தில் யாழ் குடாநாட்டில் பயன்தரு மரங்கள் பல்வேறு வழிகளில் அழிக்கப்பட்டுள்ளது உண்மை.

இவ்வாறான அழிவுகளைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இவரது உள்ளுராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள், சமூக மட்;ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து மரம் நடுகையை ஊக்குவிக்க வேண்டும்.

அழிந்து வரும் மா, பலா, புளி போன்ற மரநடுகையை ஊக்குவிப்பதுடன் சமண்டலை, தேக்கு, சவுக்கு, மகோக்கனி, வேம்பு போன்ற மரங்களின் பயன்களை தெளிவுபடுத்தி மரநடுகையை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.

Related posts: