4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்றுமுதல் குறைப்பு!

Thursday, February 9th, 2023

லங்கா சதொச இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது

இதன்படி, வட்டானா பருப்பு, ஒரு கிலோகிராம் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 305ரூபாவாகும்.

சிவப்பரிசி ஒரு கிலோகிராம் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 164 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பச்சை அரிசி விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 179 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி விலை 04 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:

வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவி...
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...
சீன ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை - வெள...