26 000 பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் – பிரதமர்!

Saturday, January 7th, 2017

சமகால அரசாங்கத்தின்  அபிவிருத்தி யுகம் ஆரம்பிக்கப்பட்டு முதல் கட்டத்திலேயே 26 000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுகொடுக்கும் முதலீடுகளை மேற்கொள்ள முடிந்திருப்பதாக பிரதமர் ரணில்விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

காலி கொக்கல முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கையுறை உற்பத்தி தொழிற்சாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது .பிரதமர் இங்கு உரையாற்றுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த கையுறைத் தொழிற்சாலை ஐந்து கோடி மில்லியன் ரூபா முதலீட்டுடன் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் இளைஞர் யுவதிகள் 7000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக்களும் 10000 பேருக்கு வேறுவகையிலான வேலைவாய்ப்புகளும் கிடைக்கபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்குமேலும் உரையாற்றுகையில் இனவாதம் பேசி மக்களை திசை திருப்புவதை விடுத்து நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டதுடன் உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு உதவத் தயாராகவுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அபிவிருத்தியிலும் முதலீட்டிலும் நாட்டைக் கட்டியெழுப்புவது அவசியம் என்றும் கூறிளார்.

இந்தியா சீனா ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது . ஆனால் அன்று ஆட்சியிலிருந்த போது இந்த நாடுகளுடன் உறவு கொண்டாடியவர்கள் இன்று இந்த நாடுகளுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்திருப்பது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கே. சமகால தேசிய அரசாங்கம் பல சவால்களுக்கு மத்தியிலேயே முதலீடு மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்துக்கு  நிலையானதேசிய கொள்கையொன்று உள்ளது.

அடுத்து வரும் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்த கொள்கையில்  மாற்றம் ஏற்படாது.கடந்த மூன்று தினங்களில் எம்மால் 16 000 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் திட்டங்களை ஆரம்பிக்க முடிந்துள்ளது. நாளை ஹம்பாந்தோட்டையில் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக மொத்தமாக  26 000 தொழில் வாய்ப்புகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்டுகிறது என்றும்  பிரதமர் ரணில்விக்கிரம சிங்க தெரிவித்தார்.

Ranil-Wickremesinghe

Related posts: