சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து 2 வாரங்களுக்குள் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Wednesday, May 8th, 2024
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த 2 வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவை சீர்செய்யும் முகமாக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதற்காக 35 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இரண்டாவது மரணமும் பதிவானது !
தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் - அரச அச்சக திணைக்களம் தெரிவி...
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பு - பயணிகள் முனையத்தையும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம்...
|
|
|


