மிருசுவில் படுகொலை : மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்க கோரிக்கை!

Thursday, February 2nd, 2017

2000ஆம் ஆண்டு மிருசுவிலில், பொது மக்கள் பலரைக் கொன்றதாகக் குற்றம் காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, தாய் நாட்டுக்கான போர்வீரர்கள் நிறுவனம், ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

தாய் நாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்த பதவிநிலை அதிகாரியான சார்ஜன்ட் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர், மேஜர் அஜித் பிரசன்ன கோரியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ஆவனஞ்செய்ய வேண்டுமென, அக்கடிதத்தில் அவர் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மிருசுவிலில் பொதுமக்கள் எண்மரை கொன்றதாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த ரத்னாயக்கவை குற்றவாளியாக இனங்கண்ட, கொழும்பு மேல் நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்திருந்தது.

தென்மராட்சி பிரிவிவுள்ள மிருசுவிலில், தாம் கைவிட்டுவிட்டு வந்த வீடுகளைப் பார்ப்பதற்காக, 2000 ஆண்டு டிசெம்பர் மாதமளவில் அங்கு சென்றிருந்த பொது மக்களில் எட்டுப்பேரின் மரணத்திற்கு அவர் காரணமாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

8yrs

Related posts: