24 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்
Tuesday, May 3rd, 2016
தமிழகத்தில் இருந்து மேலும் 24 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரத்தின் அனுசரணையின் கீழ் இவர்கள் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.இவர்கள் மதுரையில் இருந்து மிஹின் எயார் விமானம் மூலம் இன்று இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
17 ஆண்கள், 7 பெண்களை கொண்ட இந்த அகதிகள் திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, கொழும்பு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களாவர்.
நாட்டுக்கு மீளத் திரும்பும் போது இவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம், நிவாரணத் தொகைகளையும் வழங்குகிறது.இந்தநிலையில் இன்று நாடு திரும்புவோருடன் பார்க்கும் போது 2014ம் ஆண்டு முதல் இதுவரை 4709 இலங்கை அகதிகள் தமிழத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
Related posts:
விரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி !
யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!
யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த கிராமசேவகர் பிரிவுரீதியாக அலுவலர் ஒருவர் நியமனம்!
|
|
|


