167 மில்லியன் மோசடி வழக்கை மேல் நீதிமன்றத்தில் நடத்த முடியுமா?
Friday, October 7th, 2016
வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ராடா நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் 167 மில்லியன் ரூபா மோசடி சம்பந்தமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உட்பட மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா முடியாதா என்ற முடிவு இதுவரை கிடைக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக வழக்கு விசாரணைகளை நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சந்தேகநபர்களுக்கு ஏதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் டிரான் அலஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நளின் லத்துஹெட்டி, முன்னர் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அலஸ், அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
இதற்கு பின்னர், இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து, அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது சட்டத்திற்கு ஏதுவானதல்ல எனவும் லத்துஹெட்டி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை மேல் நீதிமன்றத்தில் நடத்த முடியுமா? முடியாதா? என்ற முடிவு எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

Related posts:
|
|
|


