சமூகவலைத்தள பிரதானிகள் இலங்கை வருகை!

Monday, June 13th, 2016

இந்த வருடத்தின இறுதியில் பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பெக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மற்றும் அதிவேக அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோரின் ஏற்பாட்டினால் இவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் தொழில்நுட்பத்துறைக்கு தேவையான அறிவை வளர்க்க நாட்டில் புதியதொழில்நுட்பங்களை கொண்டு அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடனேயே இவர்கள் இங்கு வரவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த மாதங்களில் உலகம் முழுவதும் கூகுள் பலூனானது பரீட்சித்து பார்க்கப்பட்டதோடு இலங்கையிலும் பலூன் திட்டம் முயற்சி மதிப்பாய்வு செய்யப்பட்டது.

பலூன்கள் மூலம் இலங்கையிலுள்ள தொலைபேசி நிறுவனங்களின் ஒலிபரப்பு அலைகளுக்கு வாய்ப்புக்களை வழங்குதல், மற்றும் இலங்கை பூராகவும் குறைந்த செலவில் இணையங்களை பயன்படுத்துவதற்கான ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களின் பிரதானிகள் இங்கு வருகைத்தருவதானாது இலங்கையின் தொழில்நுட்ப துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவர்என நம்பப்படுகின்றது.

 

Related posts: