150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் வடமாகாணத்தில் ஸ்தாபிப்பு!

2018 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் வீடுகளற்ற குடும்பங்களுக்காக 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரி வீடமைப்பு கிராம நிர்மாண வேலைகளுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு திரு.பலன்சூரிய வடமாகாணத்திற்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்ட 48 வீடமைப்பு கிராமங்களை பார்வையிட்டுள்ளார்.
மேலும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் புதிய வீடமைப்பு கிராமங்களுக்கான உட்கட்டமைப்புவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
ஆகஸ்ட் மாத முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வாய்ப்பு !
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை - 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கட...
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான...
|
|