13 வருட உத்தரவாத கல்வித் திட்டத்தில் மேலும் ஒரு பாடசாலை தெரிவு!

Thursday, May 10th, 2018

13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டத்தின் கீழ் தென்மராட்சிக் கல்வி வலயத்தில் இந்த வருடம் மேலும் ஓர் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு தொழில் முறைப் பாடங்கள் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டம் என்னும் தொழில்முறைப் பாடத் துறையில் கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்கள் இணைந்து கல்வியினைத் தொடர முடியும் என வலயக் கல்விப் பணிப்பாளர் ச.சுந்தரசிவம் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் நாளை காலை 8.00 மணிக்கு வருகை தந்து அங்கு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்கி பாடநெறியில் கலந்து கொள்ளலாமெனவும் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கல்வித் திட்டத்தில் கடந்த வருடம் தென்மராட்சி கல்வி வலயத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.

Related posts: