இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் – ஜனாதிபதி சந்திப்பு!

Wednesday, February 22nd, 2017

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்துக்குமிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றாடலைப் பாதுகாத்து பொருளாதாரத்தை உயர்த்தி, மின்சாரத்துறையை கட்டியெழுப்பும் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் இடங்களை திட்டமிடுதல், நீர் மின்சாரத்துக்கு அடுத்ததாக பாரிய காற்று மின்னுற்பத்தியை பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக பொறியியலாளர் சங்கம் விரிவாக கருத்துக்களை முன்வைத்தது.

இலங்கை மின்சார சபை திட்டமிடும் குறைந்த செலவிலான மின்நிலையங்களுக்கு எதிராக பிற்போக்கு சக்திகளால் விடுக்கப்படும் சவால்கள் தொடர்பாகவும் பொறியியலாளர்கள் சங்கம் கருத்துக்களை தெரிவித்தது.

மின்சார துறையின் அனுபவங்களுடன் சக்திவலு நிபுணர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து, எதிர்கால திட்டங்களை அமுல்படுத்த வேண்டிய தேவையை சுட்டிக்காட்டிய பொறியியலாளர் சங்க அலுவலர்கள் இலங்கை மின்சார சபையின் நீண்ட கால திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிற்றிய, பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா, அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ்.பட்டகொட, இலங்கை மின்சார சபையின் தலைவர் டபிள்யூ.டீ.எஸ்.விஜேபால உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ilankaimisarasabai

Related posts: