11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Saturday, August 7th, 2021

டெல்டா கொரோனா தொற்றாளர்கள் 11 மாவட்டங்களின் 26 நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் டெல்டா கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெல்டா நோயாளர்கள் மீது மேற்கொண்ட பரிசோதனை யில் நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இருக்கும் டெல்டா நோயாளர்களின் அதிகபட்ச தரவு இது அல்ல என்றும் டெல்டா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து பெரும்பாலான டெல்டா நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள் ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராகம, கடவத்த, கொழும்பு, அங்கொடை, கொட்டி காவத்தை, பியகம, நுகேகொடை, பொரலஸ்கமுவ, கல்கிசை, மஹரகம, பிலியந்தலை, பாணந்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, அம்பாறை, குருணாகல், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: