“ஹேவிளம்பி” வருடத்தை கொண்டாட மக்கள் தயார்!

Thursday, April 13th, 2017

மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ் புத்தாண்டாகும். இதன்பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 1ஆம் நாள் வியாழக்கிழமை ஆங்கிலமாதம் ஏப்பிரல் 13ஆம் (13.04.2017) திகதி பின் இரவு 00:48 மணிக்கு அபரபக்ஷ் திருத்தியை திதியில் விசாக நட்சத்திரத்திரம் 3ஆம் பாதத்தில் மங்களகரமான ”ஹேவிளம்பி வருஷம்” பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.

இந்த புத்தாண்டு 13.04.2017 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வடபகுதிமக்கள் மிகுந்த ஆர்வத்தடன் பொரட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதை காண முடிகின்றது..

Related posts: