புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்பாளர்!

Friday, December 22nd, 2017

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்பாளர் சரத் ஜெயமன்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் எதிர்ப்பு சட்டம் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இதில் உள்ள சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றை சீர்செய்து, புதிய சட்டமூலத்துக்கான வரைவு எதிர்வரும் இரண்டு மாதங்களுள் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: