எழுதுமட்டுவாழில் வெடிபொருள் மீட்பு!

Wednesday, December 7th, 2016

எழுதுமட்டுவாழ் தெற்குப்பகுதியில் விவசாயக்காணியிலிருந்து எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை உழுது பண்படுத்திக் கொண்டிருந்தபோது, அங்கு தகரப்பெட்டி என்று வெளிக்கிளம்பியுள்ளது. அந்தத் தகரப்பெட்டியை மண்வெட்டியினால் தோண்டியபோது வெடிபொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டது. அது தொடர்பில் முகமாலையில் உள்ள ஹலோ ரேஸ்ட் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது.

ஹலோ ரேஸ்ட் நிறுவனத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு எச்சரிக்கைக் குறியீடுகளை பொருத்தினர். கிராம அலுவலர் ஊடாகக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு நேற்றுத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வெடிபொருள்களை மீட்டு அழிப்பதற்கான அனுமதியை சாவகச்சேரி நீதிவான் மன்றில் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து 52ஆவது படைப் பிரிவினர் வெடி பொருள்களை மீட்கும் பணியை ஆரம்பித்தனர். குறித்த பகுதி 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

removed-shell

Related posts: