வேட்டைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது!
Monday, February 20th, 2017
அநுராதபுரம் – வில்பத்து சரணாலயத்தில் வேட்டைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 10 பேர், வனவிலங்குகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் அடங்குவதாக வனவிலங்குகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எஸ்.கே. பதிரண குறிப்பிட்டார்.
சந்தேகநபர்களின் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட இரண்டு ஆமைகளையும் வனவிலங்குகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் புத்தளம் பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:
கல்விசார ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!
இலங்கையில் அறிமுகமாகும் நவீன புகையிரதம்!
தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
|
|
|


