வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம் – முற்பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, November 11th, 2020

கொரோனா தொற்றால் ஒரு மாதமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட, வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, பிறப்புச் சான்றிதழ், கல்வி தகுதிச் சான்றிதழ்கள் என்பவற்றை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வார நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதன் சேவைகள் வழங்கப்படவுள்ளதுடன் வெளி விவகார அமைச்சின் துணை தூதரகத்திற்கு வருவதற்கு முன்பு பொதுமக்கள் முன் கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாகும் எனவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பதிவுசெய்வதற்காக  0112 338 812 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் முன்கூட்டியே முன்பதிவு செய்யாத எந்த ஒரு நபர்களையும் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்காதிருக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: