வெளிநாடு செல்ல கோத்தபாயவுக்கு நீதிமன்றம் அனுமதி!
Monday, October 3rd, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளார்.
சீனாவில் இடம்பெறவுள்ள பிராந்திய பாதுகாப்பு மாநட்டில் கலந்துக்கொள்வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணி கடந்த 30 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி எவன்காரட் விசாரணை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதோடு, வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
255 எம்.பிக்களாக உயர்த்த ஆலோசனை!
வவுனியா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் கைது!
ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் - ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா ...
|
|
|
காக்கைதீவு மீள்சுழற்சி வளாகத்தில் மாநகர சபையின் கழிவு தண்ணீர் பரிகரிப்புத் தொகுதிப் பிரிவு திறப்பு!
கால்நடைகளின் மருந்துகளின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீ...
வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - இராஜாங...


