வெலிக்கடை சிறையை ஹொரணைக்கு மாற்ற மக்கள் எதிர்ப்பு!

Tuesday, August 15th, 2017

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சா​லையை ஹொரணைப் பிரதேசத்துக்கு இடமாற்றுவதற்கு அப்பிரதேச பொதுமக்கள் கடும் எதிர்ப்​பை வெளிப்படுத்தியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் அமைந்துள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்குட்பட்ட வெலிக்கடை சிறை, மெகசின் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை என்பவற்றை கொழும்புக்கு வெளியில் இடமாற்றும் திட்டமொன்று நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக புதிய சிறைச்சாலைத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஹொரணைப் பிரதேசத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவிலான காணியொன்று இனம் காணப்பட்டுள்ளது. ஹொரணை அருகே மில்லனிய, தொம்பகொட கிராமத்தில் அமைந்துள்ள நிச்சபல் தோட்டத்தில் குறித்த காணியை அளவிடுவதற்காக நேற்றைய தினம் நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் மற்றும் பௌத்த துறவிகள் சிறைச்சாலைத் தொகுதியை அப்பிரதேசத்தில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, பொலிசாரும், பிரதேச செயலாளரும் பொதுமக்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts: