வீதியோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை வவுனியா நகரசபை செயலாளர் அறிவுறுத்து!

Thursday, December 29th, 2016

வவுனியாவில் வீதி ஓரங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் நகரை சுத்தமாக வைத்திருக்க சகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வவுனியா நகரசபை செயலாளர் தயாபரன் மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்

வவுனியா புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பகுதி அருகே பொதுமக்கள் குப்பைகளை வீசுவதால் அந்தப் பகுதி துர்நாற்றம் வீசுகின்றது என்று நகரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. அங்கு நேரில் சென்ற நிலமைகளை பார்த்த நகரசபைச் செயலாளர் ஊழியர்களைக் கொண்டு அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தினார். அதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

கழிவுகளை நகரசபை கழிவகற்றும் வாகனம் வரும்போது அவற்றை ஒப்படைக்கலாம். தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கொட்டுவதால் தண்ணீர் மற்றும் சூழல் மாசடைதல் போன்றன இடம்பெறுகின்றன. வீதி ஓரங்களில், வாய்க்காலில் கொட்டுவதால் குப்பைகளை அகற்ற நகரசபை ஊழியர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – என்றார். அதேவேளை, நேற்று முன்தினம் நகரசபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் நேற்றுக்காலை மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Vavuniya-UC

Related posts: