வீதியை விரைவாக புனரமையுங்கள் – பொதுமக்கள் வேண்டுகோள்!
Friday, November 11th, 2016
கரவெட்டி விராலிமடம் தில்லையம்பலம் வரணி வீதி 60இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்வதற்கு ஒதுக்கப்பட்டது. இது வீதி அதிகாரசபை ஊடாக ஒப்பந்தகாரரிடம் வழங்கப்பட்டது.
ஆனால் 5 மாதங்கள் ஆகியும் கல்லு பறித்து பரவிய நிலையிலேயே உள்ளது. இதனால் வயல் நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள், அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அவ்வழியாகச் செல்ல முடியாமல் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதில் வயது வந்தவர்கள் பலர் விழுந்து அவதிப்படுகின்றனர். இப்பாதை முதல் இருந்த அளவை விட மிகவும் ஒடுக்கமாக கல்லு பரவப்பட்டுள்ளது. இன்றும் 1 மாதத்தில் இவ்வீதி புனரமைப்புச் செய்யத்தவறின் இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பும் நிலை ஏற்படும். இவ்வீதியை உடனடியாக புனரமைப்புச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts:
மக்களை ஏமாற்றிய வர்த்தகர்களுக்கு 6லட்சத்து 90ஆயிரம் ரூபா அபராதம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இண...
கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு புதிய போக்குவரத்து கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்...
அரசியல் கட்சி, கொள்கைகளுக்கு இடமளிக்காது நாடு எனும் ரீதியில் சவால்களை வெற்றி கொள்ள ஒத்துழைக்கவும் - ...
|
|
|


