மக்களை ஏமாற்றிய வர்த்தகர்களுக்கு 6லட்சத்து 90ஆயிரம் ரூபா அபராதம் – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இணைப்பதிகாரி!

Friday, November 25th, 2016

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தினை மீறி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் வியாபார நடவடிக்கையினை முன்னெடுத்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின்படி கடந்த மாதம் மட்டும் 6லட்சத்து 90ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்:

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட 77 வழக்குகளில் 73 வழக்குகளில் பெரும்பாலானவை காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தமையே ஆகும். மேலும் 2 வழக்குகள் வர்த்தகர்களை ஏமாற்றுமு; நோக்கத்துடன் செயற்பட்டமை, ஒரு வழக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் சுற்றுநிருப லேபிள் தொடர்பானவையாகும். யாழ்.மாவட்டத்தில் உள்ள 5 நீதிமன்றங்கள் ஊடாகத்தாக்கல் செய்யப்பட்ட 77 வழக்குகள் மீதான விசாரணை நிறைவில் மொத்தமாக 6லட்சத்து 90ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

CAA

Related posts: