வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை!

கரவெட்டி கிழக்கு யாக்கரு பெரியதம்பிரான் கோவில் வீதி குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது. தற்பொழுது பெய்து வரும் மழையினால் நீர் தேங்கிய நிலையில் பயணிக்க பெரும் சிரமாக சகதியுடன் காணப்படுகிறது.
இவ்வீதியில் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், உத்தியோகத்தர்கள் என பலர் சென்று வருகின்ற நிலையில் இது சம்பந்தமாக ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இன்னும் இவ்வீதி திருத்தப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனவே இவ்வீதியை விரைந்து புனரமைப்புச் செய்துதர வேண்டும் என அப்பகுதி வாழ்மக்கள் கேட்டுள்ளனர்.
Related posts:
படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை- இராணுவப் பேச்சாளர்!
யாழ். எம்.ஜி.ஆர் காலமானார்!
பாடசாலைகளில் ஒரே நேரத்தில் இரு பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு – விரைவில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அம...
|
|