இந்த வாரத்தில் மழை பெய்தால் மட்டுமே 70 வீத நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும்!

Wednesday, January 4th, 2017

யாழ்.மாவட்டத்தில் மாரி மழை உரிய காலத்தில் பொய்யாமையால் நெல் விளைச்சலின் அளவு குறைவாகவே இருக்கும்.

இந்தவாரம் மழை பெய்யுமானால் 70 வீதமான செற்பயிர்ச் செய்கையைப் பாதுகாக்கலாம் மழை தொடர்ந்து பொய்யாவிடில் நெற்பயிர்ச்செய்கை மட்டுமல்ல ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் தாக்கம் ஏற்படும் என யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்துள்ளார்.

யாழ்மாவட்ட நெற்பயிர்ச் செய்கையின் சமகால நிலை;பாடு தொடர்பாக கூறுகiயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாரி மழை வேளையில் பொய்யாமையால் யாழ்.மாவடட நெற்பயிர்ச்செய்கை பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நெற்பயிர் வளரும் பருவத்தில் வயல் நிலங்களில் நீர் தேங்கி நிற்க வேண்டும். அந்த நிலை இந்த வருடம் இல்லாமையாலும் வறட்சியான நிலை காணப்பட்டமையாலும் நெல் விளைச்சலின் வீத அளவு குறைவடையலாம்.

மாரி மழை இந்த வாரமளவில் பொய்யுமானால் 70 வீதத்துக்குக் குறையாத நெற் பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கலாம். மழை பெய்யாவிடில் நெற்பயிர்ச்செய்கையில் பாதிப்பளவு கூடலாம். மழையில்லாத கூழல் நெற்பயிர்ச் செய்கையில் மட்டுமல்ல ஏனைய பயிர்ச் செய்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. – என்றார்.

Daily_News_7586742639542

Related posts: