வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் பலி!
Saturday, December 24th, 2016
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் நேற்று (23.12.2016) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 08.53 மணிக்கு கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் ஆலயத்திற்கு முன்னால் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதி சிறிது தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு விபத்துக்குள்ளானார். இதனையடுத்து உடனடியாக அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் மாங்காட்டையை சேர்ந்த சிவகுரு ரமேஸ் (36வயது) என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிசார் தனியார் பஸ் சாரதியை கைது செய்ததுடன் இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
|
|
|


