வீட்டுத்திட்டத்திற்கு 29 ஆயிரம் பயனாளிகள் விண்ணப்பம்!
Sunday, April 3rd, 2016
மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படவிருக்கும் 65 ஆயிரம் விட்டுத்திட்டத்திற்கு இதுவரை 29 ஆயிரம் பயனாளிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மீள்குடியேற்ற அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டது. இந்த நிலையில், கடந்த 31 ஆம் திகதி வரை 29 ஆயிரம் பயனாளிகள் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பத் திகதி கடந்த 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்ப திகதி மேலும் இருவாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
போதைப்பொருள் வைத்திருந்தவர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வழங்க முயற்சி!
வெளியானது அதிவிசேட வர்த்தமானி - பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது – ...
|
|
|


