பல்கலை. கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்
Thursday, March 31st, 2016
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பல மாதங்களாக தெரிவித்து வந்ததாகவும் , கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கடிதம் மூலம் அறிவித்ததாகவும் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
எனினும் தமது கோரிக்கைளுக்கு எவரும் செவிசாய்க்கவில்லை என இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டும் நபரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவ...
கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கம் - புவ...
நடுத்தர ஆடைத் தொழில்துறை அபிவிருத்திக்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ புதிய முயற்சி!
|
|
|


