தாய்ப்பால்: உலக அளவில் முதலிடம் பிடித்த இலங்கை!

Tuesday, January 21st, 2020


தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை இடம் பெற்றுள்ளது. உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு முயற்சியில் இந்த ஆண்டு இலங்கைக்கு பசுமை தரவரிசை கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டின் படி இலங்கை 91 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு இலங்கை பாராட்டப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு குறித்த ஆய்வு 120 நாடுகளில் நடத்தப்பட்டது. இதன்படி, நாடுகள் 10 அளவுகோல்களில் தீர்மானிக்கப்படுகின்றன, பின்னர் வண்ண குறியீட்டு புள்ளிகள் அமைப்பு மூலம் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.

அதன்படி, சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை என நாடுகள் ஏறுவரிசையில் பிரிக்கப்படுகின்றன.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: