நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வழங்க முயற்சி!

Monday, July 11th, 2016

225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள் இன்னும் நான்கு மாதங்களுக்குள் நாட்டுக்கு வரவழைக்கப்படவுள்ளதாக அமைச்சர்களான நிமல் லன்சா மற்றும் தலதா அத்துகோரளை ஆகியோர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரித்துள்ளன.

ஏற்கனவே உள்துறை பிரதியமைச்சர் நிமல் லன்சா 8.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். இது அமைச்சுக்கு ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் அல்ல. தனிப்பட்ட ரீதியாக கொள்வனவு செய்யப்பட்டதாகும்.

இந்தநிலையில் தமக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன அனுமதி பத்திரத்தை கொண்டு அமைச்சருக்கான வாகனத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தலதா அத்துகோரளையும் தனிப்பட்ட ரீதியில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். இந்தநிலையில் தமக்கு கிடைத்த தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை கொண்டு அமைச்சுக்கான வாகனத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்கள் வாகன கொள்வனவுகளை குறுகிய காலத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தடை செய்துள்ள நிலையிலேயே 225 பேருக்கும் வாகனங்கள் வருகின்ற செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: