எல்லைகளின்றி அரிசியை கொள்வனவு செய்யலாம் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!

Tuesday, February 21st, 2017

லங்கா சதோச வர்த்தக நிலையங்களில், எல்லைகளின்றி அரிசியை பெற்றுக் கொள்ள நுகர்வோருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிக விலைக்கு அரிசி விற்கும் நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அரிசியை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களின் களஞ்சியசாலைகள் குறித்து ஆராய்ந்து, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 17ம் திகதி வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அரிசிக்கான அதிக பட்ச சில்லறை விலை குறித்த விபரங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது பின்வருமாறு,

இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோ – 72 ரூபா
தேசிய நாட்டரிசி ஒரு கிலா – 80 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட கெகுளு அரிசி ஒரு கிலோ – 70 ரூபா
நாட்டு கெகுளு ஒரு கிலோ – 78 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட சம்பா ஒரு கிலோ – 80 ரூபா
தேசிய சம்பா ஒரு கிலோ – 90 ரூபா

ff-1

Related posts: