வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு!

மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் கொலை வழக்கு இன்று (09) ஊர்காவற்துறை நீதவான் எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சந்தேகநபர்களை எதிர்வரும் செப்பெடம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் 12 சந்தேகநபர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரினால் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
Related posts:
வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாள...
இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர த...
|
|