விசேட கல்வி தொடர்பான கற்கை நெறிக்கு விண்ணப்பம்!

Tuesday, November 1st, 2016

தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்படவுள்ள விசேட கல்வி தொடர்பான கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களை விருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படை தேர்ச்சிகளை வழங்கும் நோக்கில் பகுதிநேர கற்கை நெறியாக நடத்தப்படவுள்ள  இவ்விசேட கல்வி டிப்ளோமா மற்றும் விசேட கல்வி தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி என இரு வகையில் இடம்பெறவுள்ளது.

இக்கற்கை நெறிக்கு 55 வயதிற்குட்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அரசாங்க அல்லது அரசாங்க பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றுபவர்கள் அல்லது கல்வி பயிலுநராகக் கடமையாற்றுபவர்கள் அல்லது அதிபர் சேவை அல்லது கல்வி நிர்வாக சேவையில் உள்ளவர்கள் அல்லது விசேட தேவை உடையோருக்கான பாடசாலை அல்லது நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களும் விசேட கல்வி டிப்ளோமா கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும். சான்றிதழ் கற்கை நெறிக்கு 55 வயதிற்குட்பட்ட க.பொ.த. சாதாரணதரம் சித்தியடைந்த விசேட கல்வித் தகமையைப் பாடசாலைகளில் அல்லது அது தொடர்பான நிறுவனத்தில் கடமையாற்றுபவர்கள் அல்லது விசேட தேவையுடைய பிள்ளைகளின் தாய் அல்லது தகப்பன் விண்ணப்பிக்க முடியும். இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் விண்ணப்பத்துடன் மேலதிக விபரங்களை பணிப்பாளர், உட்படுத்தற் கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம், மகரகம என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18-1442560705-application45

Related posts: