வட மாகாணத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களுக்கு  சந்தைவாய்ப்புப்  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

Friday, July 1st, 2016

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் எமது மண்ணுக்கேயுரிய தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், பொருத்தமான வசதிகளைப் பெற்றுக் கொடுக்க யாழ்.  வணிகர் கழகம் முன்வந்துள்ளது.

இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ். வணிகர்  கழகத்திற்கு ஏற்கனவே கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பைப்  பயன்படுத்த வசதியாக எமது மண்ணில் உள்ளுரில்  உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் பற்றி அனைத்து விபரங்களையும் உற்பத்தியாளர்கள்  விரைவாக அனுப்பி வைக்க முடியும்

யாழ் வணிகர் கழகம்” , 165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியுடனோ அல்லது  jaffnachamberofcommerce@gmail.com என்ற ஈமெயில் முகவரியுடனோ  உற்பத்தியாளர்கள் தொடர்பு கொள்ள முடியும்மேலதிக விபரங்களுக்கு 021 222 8593 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ள முடியும்  என யாழ் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்

Related posts:


தேசிய லொத்தர் சபை வெளி விவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை சட்டவிரோ தமானது - ட்ரான்ஸ் பேரன்ஸி இன...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏனைய மதங்களையும் உயர்வாக மதிக்கும் குணமுடையவர் - இந்துமத பீடத்தின் செயலாளர் ப...
அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...