உலக உணவுத்திட்ட பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளருடன் விஷேட சந்திப்பு!

Wednesday, October 28th, 2020

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார்.

நேற்றையதினம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது நாட்டின் மூலோபாய திட்டம் 2018 – 2020 ஊடாக உலக உணவுத் திட்ட உதவியின் மூலம் அதற்கான ஒத்துழைப்பை தொடர தேசிய முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னெடுகப்படும் நடவடிக்கைகள் மற்றும் தற்போது நாட்டில் நிலவும் நிலைமைகளின் போது உலக உணவுத் திட்டத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

தொற்று நோய் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்து கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு உயர்வான சேவையை வழங்க இராணுவ – சிவில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமாதானத்திற்கான நோபல் பரிசை வெற்றிகொண்ட உலக உணவுத்திட்ட நிறுவத்திற்கும் இதன்போது பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: